Sunday, May 31, 2009

For a change..

For a change, this post is in Tamil. Apologies if you can't read it.

ஆழ் கடல் சூழ்ந்த ஆளில்லா அக்னித் தீவு அது!

அமைதி வேண்டுமென்றேன் அன்று,
அது போதுமென்றேன் இன்று..

அன்னத்தை புறக்கணித்தேன் அன்று,
அது புறமுதுகு காட்டியது இன்று..

பாசத்தில் பற்றில்லை அன்று,
பற்றிக்கொள்ள ஏதுமில்லை இன்று..

இயற்கை சூழவேண்டுமேன்றேன் அங்கு,
சூழ்ந்தது போதுமென்றேன் இங்கு..

தனிமை இனிமை என்றேன் அன்று,
அது இனிக்காது என்வாழ்வில் இன்று..

--
எட்டிய தூரத்தில் படகெதுவும் தோன்றவில்லை..
அருகில் தோன்றிய வானமோ எட்டவில்லை..

புரியும் மொழி பேசிக்கழிக்க தோழன் இல்லை..
எதிரே நின்று பேசும் குயிலின் மொழி புரியவில்லை..

தாகம் தணிக்க தேடிய குடிநீர் கிடைக்கவில்லை..
தேடாமல் கிடைத்த கடல்நீர் தாகம் தணிக்கவில்லை..

சற்று நேரம் களைப்பாற ஒரு மர நிழலுமில்லை..
நித்தமும் எனைத் தொடரும் நிழலோ களைப்பாகவில்லை..

கண் மூடி எனை மறக்க நல்ல படுக்கை இல்லை..
கடல் படுக்கைக்கோ மூடிக்கொள்ள கண் இமையுமில்லை..

வேலை செய்து பிழைக்க வேண்டிய அவசியமில்லை..
அவசியமற்ற இப்பிழைப்புக்கோ இனி வேலைஇல்லை..

--
கண்ணை மூடினேன்
கடலில் மூழ்கினேன்
கழுத்தை நெறித்தேன்
கதிரவன் தோன்றினான்
காலை உதித்தது
கதவு திறந்தது
காற்று வந்தது
கனவு கலைந்தது!

7 comments:

Karthik said...

அருமை! அருமை!!

Kavity said...

Beautiful!

Aruna said...

முரண்பாடுகள் அற்புதம்..

இரா. வசந்த குமார். said...

ஹாய் ஷண்முகவேல்மணி...

ஆச்சரியம். உன் ப்ளாக்கை இப்ப தான் பாக்கறேன். அதுவும் தமிழ்ல. அதுவுமதுவும் கவிதை..! சூப்பர் பாஸ்..!! அஷோக் ப்ளாக்ல இருந்து வந்தேன். இனி அடிக்கடி வருவேன்..! :)

SMS - Shanmugavel said...

Thanks everyone. Hope to write more in tamil in future.

Siddharth Lotlikar said...

Dwello is the new place to buy Homes. Buy your new home with confidence with Dwello. Dwello - The Right Address is Waiting
Property In shivajinagar
Property In sion

Siddharth Lotlikar said...

Dwello is the new place to buy Homes. Buy your new home with confidence with Dwello. Dwello - The Right Address is Waiting
tridhaatu