Monday, July 27, 2009

அம்பி, நம்பி, தும்பி, தம்பி!

(1) ஆரம்பித்தான் அம்பி..

பிறப்பு முதல் இறப்பு வரை,
குழவி முதல் கிழவி வரை,
நாடு முதல் காடு வரை,
சாலை முதல் சோலை வரை,
அரசன் முதல் ஆண்டி வரை,
அனைத்தும் தேடல் தான்!
தேடி, ஓடி, நாடி, வாடி
முயன்றான்! முடியவில்லை!
முடிந்ததில் மகிழ்ச்சி இல்லை!
பிறப்பு முதல் இறப்பு வரை தேடல் தான்!

(2) நடுவில் நுழைந்தான் நம்பி..

குழந்தைக்கு பொம்மை மீது
குமரனுக்கு பெண்மை மீது

வண்டுக்கு மலர்ச்செண்டு மீது
நண்டுக்கு மாமிசத்துண்டு மீது

நதிக்கு கடல் மீது
பதிக்கு ஊடல் / கூடல் மீது

கலைஞனுக்கு கதை மீது
கவிஞனுக்கு கவிதை மீது

குயிலுக்கு பாடல் மீது
மயிலுக்கு ஆடல் மீது

பிறந்தவனுக்கு பொருள் மீது
துறந்தவனுக்கு அருள் மீது
இறந்தவனுக்கு இருள் மீது

அனைத்தும் காதல் தான்..

அன்பு, ஆசை
நோக்கம், ஏக்கம்
மோகம், தாகம்
பல பரிமாணங்கள்
ஆககல் முதல் அழிதல் வரை
அனைத்திற்கும் அஸ்திவாரம் காதல்!

(3) தூங்கி விழித்தான் தும்பி..

கருவறை நுழைய.. செய்தேன்
எண்ணிலடங்கா விந்துக்களோடு!

அன்னை கவனம் பெற.. செய்தேன்
அன்பு சகோதரனோடு!

விளையாட்டில் வெற்றிபெற.. செய்தேன்
அடுத்த வீட்டு பையனோடு!

தேர்வில் முதல் வர..
தோழமையில் பிடிப்பு வர..

காதலியை கை பிடிக்க
கயவர்களின் கை ஒடுக்க

மக்களை பாதுகாக்க
மாக்களை சாதுவாக்க

தன்னை உயர்த்த
பெண்ணை ஈர்க்க

மண்ணை வெல்ல
விண்ணை வீழ்த்த

செய்தேன் நாளும் பொழுதும்!
மோதல்!

வாழ்க்கை என்பது மோதல்!
மேதை டார்வின் சொன்ன மோதல்!

(4) தடுமாற்றம் இன்றி தலையசைத்தான் தம்பி..

தேடல்
காதல்
மோதல்
சாதல்

இது மட்டுமல்ல வாழ்க்கை..
இவை அனைத்தையும் உட்கொண்டது!

மேலும்..

உத்தமமானது, உயர்வானது!
இயற்கையானது, இனிமையானது!
சொல்ல போனால், எளிதானது!

வாழ்க்கை என்பது "வாழ்தல்"
உனக்காகவும், ஊருக்காகவும்!
உண்மையாக, உயிரோட்டமாக!
விழிப்பாக!
நிகழ்காலத்தில்!

1 comment:

Anonymous said...

Dwello is the right place to buy Homes. Buy your new homes with confidence with dwello. Dwello - Right Address is Waiting.
Aishwarya Heights
The Domus
Alag Marina
Tulsi Sonata
Ambaji Niketan